மரண அறிவித்தல்,

திருமதி ஜோதினி இராஜ்குமார்

செட்டிகுளத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஜோதினி இராஜ்குமார் அவர்கள் 13-05-2013 திங்கட்கிழமை அன்று அகால மரணமடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திரு.சிறிஸ்கந்தபாலன், திருமதி.ஜெயலக்ஸ்மி சிறிஸ்கந்தபாலன் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற திரு.அர்ச்சுணராஜா மற்றும் திருமதி.கமலா அர்ச்சுணராஜா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இராஜ்குமார் அர்ச்சுனராஜா(ரமேஸ்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

அஜிசன் அவர்களின் ஆருயிர் தாயும்,

காலஞ்சென்ற DR. சங்கரப்பிள்ளை, திருமதி.சங்கரப்பிள்ளை தம்பதிகளின் அன்புபேத்தியும்,

சுவர்ணா, சிறிபிரகாஸ், நிவேதா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அஜே, அஜன், அறின் ஆகியோரின் பாசமிகு சித்தியும்,

பரமகுரு, வசந்தி, வசந்தகுமார், விஜயலதா, காந்தன், ஜெயந்தி, அகிலன், சுபா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தவராஜா, மகேந்திரன்(தாயகம்), ரவீந்திரன்(அவுஸ்திரேலியா), புலேந்திரன்(கனடா), ராஜேந்திரன்( ஜேர்மனி), காலஞ்சென்ற பாலேந்திரன், காலஞ்சென்ற செல்வேந்திரன், காலஞ்சென்ற நகுலேந்திரன், ஆதிதேவி(பிரான்ஸ்), கௌரிதேவி(இந்தியா) ஆகியோரின் அன்பு மருமகளும்,

புஸ்பராணி(லண்டன்), செல்வராணி(தாயகம்), யோகலக்ஸ்மி(அவுஸ்ரேலியா), ராஜலக்ஸ்மி(தாயகம்), விஜயபாலன், சிவபாலன், காலஞ்சென்ற தில்லை ஆகியோரின் அன்பு பெறாமகளும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : புதன்கிழமை 22/05/2013, 09:00 மு.ப — 12:00 பி.ப
இடம் : 43 - 47 Rushey Green, Catford, London, SE6 4AS.
தகனம்
திகதி : புதன்கிழமை 22/05/2013, 01:00 பி.ப — 01:45 பி.ப
இடம் : Hither Green crematorium, Verdant Lane, London, SE6 1TP.
திகதி :
இடம் :
தொடர்புகளுக்கு
ரமேஸ்(கணவர்) — பிரித்தானியா
தொலைபேசி : +447931329871
பிரகாஸ்(சகோதரன்) — பிரித்தானியா
தொலைபேசி : +442083185596
கைப்பேசி : +447429833252
வசந்தகுமார்(மைத்துனன்) — பிரித்தானியா
தொலைபேசி : +447717805747