மரண அறிவித்தல்

திருமதி.ஞானசௌந்தரி இராசநாயகம்

தோற்றம்: 03.06.1931   -   மறைவு: 04.09.2015

யாழ் இளவாலை, பத்தாவத்தையைப் பிறப்பிடமாகவும், ஒமந்தை இராசநாயகபுரம் மற்றும் வவுனியா இறம்பைக்குளம் ஆகியவற்றை வதிவிடமாகவும் கொண்டவரான திருமதி.ஞானசௌந்தரி இராசநாயகம் அவர்கள் 04.09.2015 (வெள்ளிக்கிழமை) அன்று காலமானார்.

அன்னார் இளைப்பாறிய தபாலதிபரும் இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியவற்றின் முன்னாள் வவுனியா மாவட்ட கிளைச்செயலாளருமாகிய அமரர். எம்.பி இராசநாயகம் அவர்களின் அன்பு மனைவியும், திருமதி இரட்ணகுமாரி சந்ரேஸ்பரநாயகம் (ஆசிரியர் வவுனியா பூந்தோட்டம் மகா வித்தியாலயம்), திருமதி சந்திரகுமாரி சகாயநாதன் (உப அதிபர் இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலை), சு.பு.சற்குணராஜா (ஆசிரியர் பண்டரிகுளம் விபுலானநந்தா கல்லூரி), திரு.சத்தியகுமாரி மரியதாஸ் (ஆசிரியர் குளமன்கால் கத்தோலிக்க பாடசாலை மல்லாகம்), திருமதி சுகிர்தகுமாரி வரதராஜன் (இலண்டன்), திரு.R.P.பற்குணராஜா, திரு.R.W.நற்குணராஜா(இலங்கைகாப்புறுதிகூட்டுத்தாபனம்),திருமதி.வதனகுமாரி அன்ரன் (ஆசிரியர் இந்துக்கல்லூரி கோயில்குளம்), காலஞ்சென்ற R.P.பொற்குணராஜா, திருமதி ஜமுனாகுமாரி ஜெயபாலன் ( ஆசிரியர் இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலை) அகியோரின் பாசமிகு தாயாரும்.

திரு.S.சந்திரேஸ்பரநாயகம் (காப்புறுதி முகவர்), திரு.சகாயநாதன் (தொழில்நுட்ப உத்தியோகத்தர்), திருமதி மரியராணி சற்குணராஜா ( ஆசிரியர்இளவாலை மெய்கண்டான் மகா வித்தியாலயம்), திரு. ஜோர்ச் மரியதாஸ், திரு.வரதராஜா (இலண்டன்), திருமதி. கீதா பற்குணராஜா, திருமதி. ரதி நற்குணராஜா, திரு அன்ரன், ஜெயபாலன் (இத்தாலி), ஆகியோரின் அன்பு மாமியாரும்

சுமன்தேவ், ஜயோனா, சோபனதேவ், அகில்டா, நத்தர்சன், நயோமிகா, அகில்டன், சந்தியா, ஜோஜிதன், வெலானி ஆகியொரின் பாசமிகு பேத்தியாரும் காலஞ்சென்றவர்களான அமிர்தரட்ணம், பேரின்பநாயகம் மற்றும் ராஜேந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரியுமாவார்.

அன்னாரின் பூதவுடல் 379, ஹொரவப்பொத்தானை வீதி, இறம்பைக்குளத்திலுள்ள இல்லத்திலிருந்து 06.09.2015 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் இறம்பைக்குளம் புனிஅந்தோனியார் ஆலயத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின் இறம்பைக்குளம் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

தகவல்
R.G.சற்குணராஜா (மகன்)

 

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
R.G.சற்குணராஜா (மகன்)
தொலைபேசி : 094773879933
கைப்பேசி : 0094242223319
சந்திரா
கைப்பேசி : 0094774801686