மரண அறிவித்தல்
திருமதி ஞானேஸ்வரி சுந்தரம்பிள்ளை

வேலணை மேற்கு தலைகாட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஞானேஸ்வரி சுந்தரம்பிள்ளை அவர்கள் 27-01-2014 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து சின்னம்மா(சீதேவிப்பிள்ளை) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சதாசிவம்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற சுந்தரம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
கலாதரன், சிவகணேசன், சிவநீதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை(முன்னாள் அதிபர்), பழநிநாதன்(பிரபல வர்த்தகர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நிர்மலா, மனோகரி, இளமுருகன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சரவணமுத்து(முன்னாள் ஆசிரியர்), சபாரத்தினம், விஸ்வலிங்கம், சங்கீத பூஷணம் குலசேகரம்பிள்ளை, கமலாம்பிகை மார்க்கண்டு, இராசதுரை, சாந்தலிங்கம், சௌந்தரநாயகி பேரம்பலம், சண்முகலிங்கம், மற்றும் அன்னலட்சுமி சண்முகராஜா, சௌபாக்கியலட்சுமி பழநிநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிவவிரதன், விகிர்தன், அகிலன், நிராமயன், இகபரன், நிரூபன், லக்ஷனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்