மரண அறிவித்தல்
திருமதி தங்கரத்தினம் அம்பலவாணர்

யாழ்ப்பாணம் உரும்பிராயைப் பிறப்பிடமாகவும் நீர்வேலியை வதிவிடமாகவும் கொண்ட தங்கரத்தினம் அம்பலவாணர் 11/03/2013 திங்கட்கிழமை கனடாவில் காலமானார்.
அன்னார் காலஞ் சென்றவர்களான வேலுப்பிள்ளை- ஆச்சிக்குட்டி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ் சென்றவர்களான சதாசிவம் (சின்னக்கோன்) சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சதாசிவம் அம்பலவாணரின் அன்பு மனைவியும்,
உமாசுதன் (கனடா), ஜெயசுதன் (லண்டன்), சிவாசுதன் (லண்டன்), சதாசுதன் (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும், தவமலர் (கனடா), சாருமதி (லண்டன்), சுதர்சினி (லண்டன்), சுஜிதா (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ் சென்றவர்களான சிவபாக்கியம் சின்னத் தங்கச்சி, இராசமணி, கணபதிப்பிள்ளை, ஆனந்தன், சோதிலிங்கம் மற்றும் இராசதுரை (கனடா), தர்மலிங்கம் (கனடா), இலட்சுமி (லண்டன்), மகேஸ்வரன் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுபாங்கி, சதீஸ், கீர்த்திகா, துவாரகன், அட்சரன், கௌதமன், ரிஷிகன், சௌமியா, தனீஸ், டினேஷ் ஆகியோரின் அன்பு பேர்த்தியுமாவார்.
அன்னாரின் ஈமக் கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.