மரண அறிவித்தல்
திருமதி தனலட்சுமி சிவசுப்பிரமணியம்

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், இங்கிலாந்து, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தனலட்சுமி சிவசுப்பிரமணியம் அவர்கள் 31-03-2015 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் பவளலட்சுமி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் தில்லையம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம்(Ward & Davi, வழக்கறிஞர்) அவர்களின் அன்பு மனைவியும்,
ரஞ்சித்குமார்(கனடா), அமரநாத்(இங்கிலாந்து) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான விஜயலட்சுமி, ஜெயவீரசிங்கம்(பொறியியலாளர்), குலவீரசிங்கம்(நில அளவையாளர்), ஜெயலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சந்திரிக்கா(கனடா), ராஜினி(இங்கிலாந்து), ஆதித்தன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான தளையசிங்கம், சோமசேகரம், மற்றும் யோகாம்பிகை(அம்பிகா- அவுஸ்திரேலியா), பரமேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மகேந்திரா(அவுஸ்திரேலியா), நரேந்திரா(அவுஸ்திரேலியா), றெகானா(அவுஸ்திரேலியா), சுதா, சோபா, சைலஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கங்கா(கனடா), ராஜ்குமார்(கனடா), நிர்மலா(கனடா), பிறேமிலா(கனடா), காலஞ்சென்றவர்களான ஜெகத்குமார், சியாமளா, நந்தகுமார், மற்றும் மஞ்சுளா(இங்கிலாந்து), வக்சலா(கனடா) ஆகியோரின் பெரிய தாயாரும்,
ராதா மைக்கல், ரமா ரமணா, ரஷ்மி, மயூரா, பிரியா, திவாகர் சுகன்யா, கோபிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
யூலியா, சக்தி, சாலினி, ஜீவன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்