மரண அறிவித்தல்

திருமதி தில்லைநடேசன் யோகேஸ்வரி (இஞ்சியக்கா) (முன்னாள் நொதன் ரயர் வேக்ஸ் உரிமையாளர்)

மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி, கொழும்பு தெகிவளை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தில்லைஅநடேசன் யோகேஸ்வரி அவர்கள் 29-04-2013 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சின்னத்தம்பி பூரணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணேசு கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தில்லைநடேசன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

பகிரதன், தர்சினி(நோர்வே), சுஜேந்தினி(கனடா), தயாபரன்(கொழும்பு) ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும்,

காலஞ்சென்ற ஞானசுந்தரம், மங்கையற்கரசி(மங்கை-கனடா), மகேந்திரன், இராஜேஸ்வரி(சிந்தாமணி-கனடா) ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

விக்னராஜா(நோர்வே), கருணாகரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

தில்லையம்பலம், கனகம்மா(பிரான்ஸ்), காலஞ்சென்ற புவனேஸ்வரி, மகேந்திரன், ரோசினி, ராதாகிருஷ்ணன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பாலச்சந்திரன், சாந்தகுமாரி, பாலசுந்தரம், சாந்தரூபி, சிவரூபி, வசந்தரூபி(லண்டன்), சந்திரகுமார்(ஜெர்மனி) ஆகியோரின் மாமியும்,

உதயகுமார், உதயமதி(கனடா), நந்தகுமார்(ஜெர்மனி), அஜந்தா(கனடா), ஜெயக்குமார்(மானிப்பாய் தபாலகம்) ஆகியோரின் சிறிய தாயாரும்,

அவ்சியா, டன்சியா, றோசியான், பதுசியா, கரீஸ், தனேஸ், ஜஸ்வினா ஆகியோரின் அன்புமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 30-04-2013 செவ்வாய்கிழமை அன்று காலை 09:00 மணி முதல் இரவு 09:00 மணி வரை பார்வைக்கு வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகள் 01-05-2013 புதன்கிழமை அன்று இல 591, கல்கிசை மகிந்த மலர்சாலை, மவுண்ட்லவேனியா என்னும் முகவரியில் நடைபெற்று பின்னர் காலை 10:00 மணிக்கு கொழும்பு கல்கிசை பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
ஜெயக்குமார்(ஜெயா) — இலங்கை
தொலைபேசி : +94113053091
கைப்பேசி : +94776306120
மனோன்மணி — இலங்கை
தொலைபேசி : +9468965754
கைப்பேசி : +94771514962
உதயன் — கனடா
தொலைபேசி : +14168945754
விக்னராஜா — நோர்வே
தொலைபேசி : +4722218884
கருணாகரன் — கனடா
தொலைபேசி : +15143313776
அஜந்தா — கனடா
தொலைபேசி : +19059130138