மரண அறிவித்தல்

திருமதி தேவாம்பிகை சிவக்கொழுந்து

  -   மறைவு: 01.11.2016

இணுவில் கிழக்கு, சிவகாமி அம்மன் கோயாலடியைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தேவாம்பிகை சிவக்கொழுந்து 01.11.2016 செவ்வாய்க்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற சிவக்கொழுந்துவின் (முன்னாள் பிரதம தாபலதிபர்) அன்பு மனைவியும், காலஞ்சென்ற இணுவில் கிழக்கு இளைப்பாறிய ஆசிரியர் சங்கரப்பிள்ளை – நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், தேவகுமாரி(ஆசிரியை – தொண்டமானாறு வீரகத்தி மகாவித்தியாலயம்), கேசகுமாரி (அபிவிருத்தி உத்தியோகத்தர், வடக்கு மாகாண சபை, திட்டமிடல் பிரதேச செயலகம், கரவெட்டி), புவனகுமார் (அமேரிக்கா), புவனகுமாரி(ஆசிரியை – கொழும்பு விவேகானந்தா தேசிய கல்லூரி ), தாமகுமாரி(அபிவிருத்தி உத்தியோகத்தர், வவுனியா பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் பணிமனை) ஆகியோரின் அன்புத் தாயாரும், யோகேந்திரன் (வைத்திய பொறுப்பதிகாரி ஆயுர்வேத வைத்தியசாலை – நெல்லியடி), கேதீஸ்வரன் (ஆசிரியர் – குருநாகல் இந்து கல்லூரி) ஆகியோரின் அன்பு மாமியாரும், ஹாஹினி (உடுப்பிட்டி மகளீர் கல்லூரி), அகிலேஸ் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும், காலஞ்சென்றவர்களான ரேனுமதி, கௌரிதேவி, தேவராஜன், ஜெகன்நாதன், குருலிங்கம் மற்றும் சிவைஸ்வரி ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதி கிரியைகள் பற்றி விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இந்த தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
s.புவனகுமார்
தொலைபேசி : 0212264734