மரண அறிவித்தல்
திருமதி நடராசா பரமேஸ்வரி

யாழ்ப்பாணம் மயிலியதனையைப் பிறப்பிடமாகவும் கிளிநொச்சி முறிகண்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி நடராசா பரமேஸ்வரி அவர்கள் 23.04.2014 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற நமசிவாயம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற பரஞ்சோதி (கல்லுவம்), இராசதுரை (குப்பிளான்), தவராசா (பிரான்ஸ்), பூவதாசன் (உடுப்பிட்டி), துரைராசா (கனடா), இராசேந்திரன் (முறிகண்டி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெசிந்தா, ஜெனோசன், ஜெசிதரன், ராகுலன், தனுசன், திவாகினி, கிரிசாந்தன், தீபன், உஷாந்தன், காவியா, நிரோஜன், ரெஜினா, ஜெஸிக்கா, ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 24.04.2014 புதன்கிழமை காலையில் உடுப்பிட்டியில் நடைபெற்று மதியம் 1.30 மணியளவில் வல்லை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்,
குடும்பத்தினர்.