மரண அறிவித்தல்,

திருமதி நல்லநாதன் சிவசோதி

கரம்பனைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வதிவிடமாகவும் கொண்ட நல்லநாதன் சிவசோதி அவர்கள்14 -06-2013 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கரம்பன் தெற்கை சேர்ந்த காலஞ்சென்ற தம்பு நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், திருகோணமலையை சேர்ந்த காலஞ்சென்ற சுப்பிரமணியம் பகவதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சுப்பிரமணியம் நல்லநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

ஜனனி(கனடா), சுபாஷினி(சுவிஸ்), நிஷாந்(சுவிஸ்), மகேஸ்வரி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஆனந்தராஜ்(கனடா), பாலகுமார்(சுவிஸ்), தாரணி(சுவிஸ்) ஆகியோரின் அருமை மாமியாரும்,

சிநேகா, ஐஸ்வர், அக்ஷியா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

நடராசா(கனடா), தியாகராசா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சிவஞானசேகரம், சந்திரகாந்தி(ஜெர்மனி) ஆகியோரின் மைத்துனியும்,

பேபி(திருகோணமலை), மங்கயக்கரசி(கனடா), சரோஜினி(கனடா), விஜயரெட்னம்(ஜெர்மனி) ஆகியோரின் சகலியும் ஆவார்.

அன்னாரின் திருவுடலானது Friedhof, Schonau str, 23, 3600, Thun என்னும் இடத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 24-06-2013 திங்கட்கிழமை அன்று நண்பகல் 12:00 மணிக்கு கிரியைகள் நடைபெற்று 2:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
சுபாஷினி பாலகுமார் மற்றும் குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
சுவிட்சர்லாந்து
தொலைபேசி : +41332210389
கைப்பேசி : +41788166107
— சுவிட்சர்லாந்து
தொலைபேசி : 41762511239