மரண அறிவித்தல்

திருமதி நல்லம்மா கதிர்காமத்தம்பி

வேலணையைப் பிறப்பிடமாகவும் கனடா ஸ்காபுறோவில் வாழ்ந்து வந்தவருமான திருமதி நல்லம்மா கதிரகாமத்தம்பி அவர்கள் கடந்த 21-10-2012 ஞாயிற்றுக்கிழமையன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லத்துரை நாகம்மா தம்பதிகளின் புதல்வியும், காலஞ்சென்றவர்களான செல்லப்பா-மீனாட்சி தம்பதிகளின் மருமகளும், ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரியின் இளைப்பாறிய ஆசிரியரும், யாழ்-கரம்பொன் சண்முநாத மகாவித்தியாலய இளைப்பாறிய அதிபருமான செல்லப்பா கதிர்காமத்தம்பியின் துணைவியாரும்,

ஜெயமளா (அம்பிகா-ஜேர்மனி), சியாமளா (பவா-கனடா), ஜெயகுமாரன் (கனடா), ஆகியோரின் பாசமிகு தாயாரும், லோகேஸ்வரன் (ஈசன்-ஜேர்மனி) குமாரவேள் (குமார்-கனடா), நளினி ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்றவர்களான துரைராஜா, இராசம்மா, சுப்பிரமணியம், இரத்தினம், பொன்னம்பலம், ஆகியோரின் பாசமிகு சகோதரியும் காலஞ்சென்றவர்களான ஜானகி, இராமச்சந்திரன், தங்கம்மா, இராசமணி, புவனேஸ்வரி, ஆகியோரின் அன்பு மைத்துனியும், சஞ்சீவ், சுஜீவ், அருண், நிசாந்தன், பிரசாந்தன், பிருந்தா விது, பிரவீன், ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

உறவினர், நண்பர்கள், மற்றும் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

தகவல் குடும்பத்தினர்.

நிகழ்வுகள்
அன்னாரின் பூதவுடல் 24-10-2012 புதன் கிழமை மாலை 5.00 மணியிலிருந்து 9.00 மணி வரை 4164 Sheppard Avenue East என்னும் விலாசத்தில் அமைந்துள்ள Ogden Funeral Homes (Midland & Sheppard) ல் பார்வைக்காக வைக்கப்படும்.
திகதி :
இடம் :
மறுநாள் வியாழக்கிழமை 25ம் திகதி காலை 9.00 மணியிலிருந்து 11.00 மணி வரை ஈமைக்கிரியைகள் நடைபெற்று, பின்னர் தகனக்கிரியைக்காக 256 Kingston Road ல் அமைந்துள்ள St. John’s Norway Cemetery க்கு எடுத்துச்செல்லப்படும்.
திகதி :
இடம் :
தொடர்புகளுக்கு
லோகேஸ்வரன் (ஈசன் - ஜேர்மனி)
தொலைபேசி : 4971832929
குமாரவேள் (குமார்-கனடா)
தொலைபேசி : 416 287 2422
கைப்பேசி : 416 732 9020
ஜெயகுமாரன் (கனடா) ,
தொலைபேசி : 416 847 7177
கைப்பேசி : 416 291 3140