மரண அறிவித்தல்
திருமதி நாகரத்தினம் பசுபதி (வேவி)
நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், மல்லாவி, வவுனியா, ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் தற்காலிகமாக லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட நாகரத்தினம் பசுபதி அவர்கள் 29-01-2013 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான துரைச்சாமி சேதுப்பிள்ளை தம்பதியரின் அருமை மகளும், முருகேசு சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பசுபதி அவர்களின் பாசமிகு மனைவியும்,
சுந்தரலிங்கம்(மகாரம்பைக்குளம்), தர்மலிங்கம்(முகத்தான்குளம்), மரியபாக்கியம்(நெடுந்தீவு), சிவசுப்பிரமணியம்(செட்டிக்குளம்) ஆகியோரின் அருமைத் தங்கையும்,
வசந்தகுமாரி(ஆசிரியை – யாழ் இந்து மகளிர் கல்லூரி), விஜயகுமாரி(லண்டன்), பங்கஜகுமாரி(ஆசிரியை – வவுனியா நெளுக்குளம் கலைமகள் ம.வி), உதயகுமாரி(பிரதிக் கல்விப்பணிப்பாளர் – வவுனியா வடக்கு வலயக்கல்வி அலுவலகம்), மனோகரன்(கொலண்ட்), சற்குணதேவி(லண்டன்), கிருபாகரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சந்திரபாலன்(கரைச்சி பிரதேச சபை), கிருபாகரன்(லண்டன்), சசிகுமார்(அதிபர் – வவு/சேம்மடு சண்முகானந்தா ம.வி), விவேகானந்தராஜா(வவுனியா), கெளதமி(கொலண்ட்), கருணாதனன்(லண்டன்), லிமனகலா(லண்டன்) ஆகியோரின் அருமை மாமியும்,
பிறையாளன், அருண்யா, பிரியந்தினி, கீர்த்தனன், அபிஷனா, அஸ்வின், திவியுகன், அர்ச்சிகன், அதியுகன், அபியுதா, மிஷான், அபிஷாலினி, அக்சயா, அர்ச்சகி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்