மரண அறிவித்தல்
திருமதி நாகேஸ்வரிஅம்மா தியாகராசா
தோற்றம்: 14. 02. 1923 மறைவு: 14. 03. 2014
யாழ்ப்பாணம் சித்தன்கேணியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி நாகேஸ்வரி அம்மா தியாகராசா அவர்கள் 14.03.2014 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார் காலம் சென்ற ஓய்வுபெற்ற ஓவசியர் அ. தியாகராசா அவர்களின் அன்பு மனைவியும்,
காலம் சென்றவர்களான தில்லையம்பலம், வள்ளிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலம் சென்றவர்களான அருணாசலம்பிள்ளை, அமுதம் தம்பதிகளின் மருமகளும்,
தவமணிதேவி, கமலாதேவி, மணிமாலாதேவி, இந்திரா, ரகுநாதன், ஜெகநாதன், ஜெயதேவி, றஜனி, நளாயினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவஞானம், கந்தகுமார், காலம் சென்றவர்களான மனோச்சந்திரன், விவேகானந்தன், மற்றும் வடிவாம்பாள், மோகனா, உமாச்சந்திரன், சிவகுருநாதன், ரவீந்திரன் ஆகியோரின் மாமியாரும்,
சுகுமார், சுகந்தன், சசிலன், சொரூபன், மயூரன், மாதினி, லக்ஸ்மன், நிரோசன், நிசான், சயந்தன், சாமன், பிருந்தன், தர்மன், ஜனனி, சபேசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சகாயா, ஜெயன், ஜாய், ஆனிக்கா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுகின்றோம்.
தகவல்:
பிள்ளைகள்.