மரண அறிவித்தல்
திருமதி பவானி ஜெகதீஸ்வரன்
கொழும்பைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட பவானி ஜெகதீஸ்வரன் அவர்கள் 07-03-2014 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், இரத்தினராஜா, அகிலாண்டேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நவரத்தினம்(T.A வவுனியா), மற்றும் மீனாம்பாள்(லண்டன்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஜெகதீஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,
லக்சி, கீர்த்தி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற பிரபாகரன் அவர்களின் அன்புச் சகோதரியும்,
அனுஷ்யா பாஸ்கரன்(லண்டன்), கேதீஸ்வரன்(கொழும்பு), ரூபேஸ்வரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
இரத்தினசபாபதி பாஸ்கரன், தனுஜா, இந்திரா ஆகியோரின் அன்புச் சகலியும்,
சகானா, நிறோஸ் ஆகியோரின் அன்பு மாமியும்,
ஷார்ளின், தர்மன் ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,
ஆர்தீஸ்,அம்ரிதா ஆகியோரின் அன்பு சித்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
கணவர்