மரண அறிவித்தல்
திருமதி பாக்கியரட்ணம் தில்லைநாதன் (செல்வராணி)

சாவகச்சேரியை பிறப்பிடமாகவும், வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட திருமதி பாக்கியரட்ணம் தில்லைநாதன் அவர்கள்14-07-2013 ஞாயிற்றுக்கிழமையன்று காலமானார். அன்னார் காலஞ்சென்ற திரு. திருமதி செல்லத்துரை தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி பொன்னையா தம்பதியினரின் அருமை மருமகளும், காலஞ்சென்ற டொக்டர் தில்லைநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும், ராஜினி, சிறீதரன் (சட்டத்தரணி), வசந்தினி ஆகியோரின் அன்பு தாயாரும், செல்லத்துரை, சியாமினி டொக்டர் சிவதாசன் ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்ற அரியரட்ணம் அவர்களின் அன்புச் சகோதரியும், டொக்டர் நிரோசன், விதுசன் (பொறியியலாளர்), டொக்டர் நிரூபா, சிவானி. கேசன் ஆகியோரின் அன்புப் பாட்டியுமாவார். இவர் கமலாவின் பெரியதாயும், தனலட்சுமியின் வளர்ப்புத்தாயும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 16-07-2013 செவ்வாய்கிழமை கொழும்பில் தகனம் செய்யப்பட்டது. இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்ளுகின்றோம்.