மரண அறிவித்தல்,

திருமதி பாலசுப்பிரமணியம் நாகேஷ்வரி

உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் நாகேஷ்வரி அவர்கள் 15-06-2013 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லையா மனோண்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஐயம்பிள்ளை பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

துஷ்யந்தா(பிரித்தானியா), ஜிந்துசன்(பிரித்தானியா), சிந்தினி(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சண்முகநாதன்(இலங்கை), பரமேஸ்வரி(இலங்கை), சிவனேஸ்வரி(இலங்கை), ஜெகநாதன்(இலங்கை), பூலோகநாதன்(சுவிஸ்), சிவலோகநாதன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுதர்சன், பவதாரணி, ரஜினிகாந்த் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

செல்வக்குமார், பூபாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

லக்கீசா, கிரிசன், பபிசன் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை
திகதி : வியாழக்கிழமை 20/06/2013, 02:30 பி.ப — 04:30 பி.ப
இடம் : 19 Merevale Crescent, Morden SM4 6HL, United Kingdom
தகனம்
திகதி : வியாழக்கிழமை 20/06/2013, 04:40 பி.ப — 05:20 பி.ப
இடம் : North East Surrey Crematorium Lower Morden Lane, Morden Surrey SM4 4NU.
தொடர்புகளுக்கு
பாலசுப்பிரமணியம்(கணவன்) — பிரித்தானியா
தொலைபேசி : +447405935500
ஜிந்துசன்(மகன்) — பிரித்தானியா
தொலைபேசி : +442082862577
கைப்பேசி : +447738817774
பூபாலசிங்கம் — பிரித்தானியா
தொலைபேசி : +447984084990