மரண அறிவித்தல்
திருமதி பாலமுரளீதரன் காயத்திரி (ஆசிரியை, கொக்குவில் இந்துக்கல்லூரி, கொக்குவில்)

நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பாலமுரளீதரன் காயத்திரி நேற்று (09.10.2012) செவ்வாய்க்கிழமை காலமானார்.
அன்னார் பாலமுரளீதரனின் (ஆசிரியர், மு/வன்னிவிளாங்குளம் அ.த.க. பாடசாலை, மாங்குளம்) அன்புமனைவியும், நற்குணசிங்கம் பேரின்பநாயகி தம்பதியரின் அன்புமகளும், காலஞ்சென்ற பசுபதி மற்றும் வில்வராணி தம்பதியரின் அன்புமருமகளும், ஆதிரையன் (யாழ். இந்து கல்லூரி), ஆரூரன் (யாழ். இந்து ஆரம்பப்பாடசாலை), ஆரணன் ஆகியோரின் பாசமிகு தாயும், சிவகரன் (லண்டன்), கௌரிபாலன் (லண்டன்), சிவகௌரி (லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும், திருமதி கௌரீஸ்வரி, திருமதி சிவநேசராணி, விஜிந்தன், பாலகுமரன் (மோகன்), பாலரஞ்சன், பாலமுகுந்தன் ஆகியோரின் மைத்துனியும், பாலினி, ஜெயந்தி, சசிகலா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்
தகவல் : பாலமுரளீதரன் (கணவர்), க. நற்குணசிங்கம் (தந்தை).