மரண அறிவித்தல்
திருமதி பீதாம்பரம் செல்லம்மா
மாரீசன்கூடலைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரியை வசிப்பிடமாகவும், தற்போது சுவிசை வதிவிடமாகவும் கொண்ட பீதாம்பரம் செல்லம்மா அவர்கள் 23-01-2013 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கந்தையா வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற பீதாம்பரம் அவர்களின் அன்பு துணைவியாரும்,
தங்கம்மா(இலங்கை), யோகவனம்(கனடா), தங்கரத்தினம்(இலங்கை), சோதிப்பிள்ளை(இலங்கை), பரமேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பத்மாவதி(சுவிஸ்), ரவிச்சந்திரன்(சுவிஸ்), ரகுமார்(சுவிஸ்), பிறேமாவதி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நடராஜா(சுவிஸ்), ஜெகதீஸ்வரி(சுவிஸ்), சிறிமுருகதாஸன்(சுவிஸ்), சுகிர்தா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிருந்தா, கேதீஸ், கயூரன், மதுஷன், ஜன்சிகா, ஜஸ்மிதா, றெனு, யானு, பானு, அக்ஷிகா, ஜசிந் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
யாஷனா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
ரகுமார்(மகன்)