மரண அறிவித்தல்,
திருமதி புஷ்பவதி முத்துக்குமார் (சேவியர் ரீச்சர், தமிழ்ப் பட்டதாரி ஆசிரியை)
முல்லைத்தீவு துணுக்காயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Mönchengladbach ஐ வாழ்விடமாகவும், லண்டனை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட புஷ்பவதி முத்துக்குமார் அவர்கள் 14.05.2013 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இரத்னசிங்கம் தெய்வானை தம்பதிகளின் இரண்டாவது புதல்வியும், காலஞ்சென்ற சதாசிவம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற முத்துக்குமார் (சேவியர்- புலோலி) அவர்களின் பாசமிகு துணைவியும்,
கண்ணன்(லண்டன்), மதன்(லண்டன்), ரேகா(ஜேர்மனி- Mönchengladbach), பானு(லண்டன்), வேணு(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
றினிசியா(லண்டன்), நந்தினி(லண்டன்), வசந்தன்(ஜேர்மனி), கோபிரமணா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற சரஸ்வதி, தம்பிராசா(கனடா), காலஞ்சென்ற தங்கம்மா, சௌபாக்யலக்ஷ்மி(லண்டன்), பரமநாதன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கமலாதேவி, இராமநாதன்(சட்டத்தரணி), மற்றும் சரஸ்வதி(லண்டன்), இராஜேஸ்வரி(சிங்கப்பூர்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கல்வின், டேவேஷ்வர், செலினியா, ஷைலின், டேவ்யானா, ஜனெஷ்கா, டெனிஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பார்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
பிள்ளைகள்