மரண அறிவித்தல்
திருமதி மகாதேவன் மகேஸ்வரி (மகேஸ்)
யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், அனலைதீவை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி மகாதேவன் அவர்கள் 29-09-2014 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, விசாலாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை, திருமதி கிருஷ்ணபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மகாதேவன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
மதிவண்ணன்(கனடா), தவசீலன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மங்கையர்க்கரசி(கனடா), யோகாம்பிகை(அனலைதீவு), காலஞ்சென்ற துரைபாலசிங்கம் மற்றும் நடராசா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அமிர்தலிங்கம்(கனடா), பரமேஸ்வரன்(அனலைதீவு), குமுதினி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அமுதினி(கனடா), தர்மினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வர்ணிகா(கனடா), வாரணன்(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
சிவதர்சினி, பிரபாகன், மனோகரன் ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,
கவிதா, பவிதா ஆகியோரின் பாசமிகு ஆசை அம்மாவும்,
சுஜிக்காந்த், சுரேகாந், அருண், துதிகரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்