மரண அறிவித்தல்
திருமதி மகேஸ்வரி சுந்தரம்

கம்பனை, தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், சடைச்சப்பை கொல்லன்கலட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி மகேஸ்வரி சுந்தரம் நேற்று (23.09.2015) புதன்கிழமை இறைபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற சுந்தரத்தின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவா்களான ஆறுமுகம் – தெய்வானைப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவா்களான சங்கரப்பிள்ளை – தங்கம் தம்பதியரின் பாசமிகு மருமகளும், சிவகுமாரன் (நோர்வே), ஜெயக்குமார் (பிரான்ஸ்), செந்தில்குமார் (சுவிஸ்), ராஜ்குமார் (சோதிட ஆய்வாளா்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சத்தியநாயகி, தமிழ்ச்செல்வி, கலைச்செல்வி, கருணாலட்சுமி (பிரதேச செயலகம், தெல்லிப்பளை) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
பாலசுப்ரமணியம், இராசரத்தினம், துரைரட்ணம் ஆகியோரின் அன்பு சகோதரியும்,
அகல்யா, ஆதவன், அகிலவன், அபிராம், அகரன், அத்விகா, அபூர்வா, அதிபன் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியாருமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (24.09.2015) வியாழக்கிழமை மாலை 5.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் கட்டுப்பிட்டி இந்து மயானத்துக்கு தகனக்கிரியைகளுக்காக எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினா்கள், நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினா்.