மரண அறிவித்தல்
திருமதி மகேஸ்வரி தில்லையம்பலம்

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, இந்தியா மதுரை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி தில்லையம்பலம் 22-03-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் லெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தில்லையம்பலம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
ஜெயராஜா(கனடா), பொன்னுக்குமார்(சந்திரன்- கனடா), சிவகுமார்(பிரித்தானியா), பரமேஸ்வரி(ஐக்கிய அமெரிக்கா), தயாபரன்(இந்தியா), நகுலேஸ்வரி(பிரித்தானியா), கிருபாகரன்(இந்தியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நடராஜா(ஆனந்தபுரம் கிளிநொச்சி), தங்கம்மா(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ஜெயந்தி, கலாநிதி, பானுரேகா, தயாபரன், நிர்மலா, கோபிரமணன், தாரணி, சிவப்பிரியா, சிவராஜி, ஜனனி, நவப்பிரசாத், நிஷாந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவனேஸ்வரி, காலஞ்சென்ற சதாசிவம், அருணாச்சலம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கந்தையா(கம்பஹா) அவர்களின் அன்பு மருமகளும்,
சிறீதரன், பாலசுப்பிரமணியம், கணேசராசா, சுபாதினி, பவானி, சதானந்தன், நித்தியானந்தன், கிருஷ்ணவேணி ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,
ஜெயசிறி, கவின், நிதின், ஹரினி, கீரா, யுவேதன், திரிவேனி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-03-2015 புதன்கிழமை, இல- 3/516, முல்லைநகர், தனக்கன்குளம், மதுரை, இந்தியா எனும் முகவரியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்