மரண அறிவித்தல்

திருமதி மனோராஜி மகேந்திரன்

நுணாவில் மேற்கு, சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி மனோராஜி மகேந்திரன்  (16.01.2015) வெள்ளிக் கிழமை காலமானார்.

அன்னார் மகேந்திரன் (இளைப் பாறிய அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான இராமநாதன் (இளைப்பாறிய ரயில் நிலைய அதிபர்) புவனேஸ்வரி (இளைப் பாறிய ஆசிரியை) தம்பதிய ரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான இராமநாதர் சிவபாக்கியம் (இளைப்பாறிய அதிபர்கள்) தம்பதியரின் அன்பு மருமகளும், ஆரணி (வேம்படி மகளிர் கல்லூரி A/L 2016) ரவிந்திரஷங்கர் (யாழ். இந்துக் கல்லூரி தரம் 11 ) ஆகியோரின் அன்புத் தாயும், மனோகரி (கனடா), காலஞ்சென்ற திசைவீரசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், சத்தியானந்தன் (கனடா), திருமதி கு.நாமநாதன் (பகுதித் தலைவர், யா/வைத்தீஸ்வராக் கல்லூரி), திருமதி அ. பரலோக ராஜா (ஆசிரியை, யா/அரியாலை ஸ்ரீபார்வதி வித்.) எஸ். ஆர். சிவேந்திரகலாநிதி (நில அளவையாளர் யாழ். நில அளவைத் திணைக்களம்), செல்வி இ.வசந்தசெல்வி (தாதிய உத்தியோகத்தர் யாழ்.போதனா வைத்தியசாலை), இ.சர்வேந்திரன் (உதவித் திட்டமிடல் பணிப்பாளர், கச்சேரி, யாழ்ப்பாணம்), இ.சத்தியேந்திரம்பிள்ளை (உபபீடாதிபதி யாழ். தேசிய கல்வியியற் கல்லூரி) ஆகியோரின் அன்பு மைத்துனியும், பிரவீன் (கனடா), பைரன் (கனடா) ஆகியோரின் அன்புச் சிறிய தாயும், அ.சோபியா (சட்டத்துறை யா.ப.க) அ.பிரவீணா (பொறியியல் பீடம் மொறட்டுவ), அ.அபிராம் (யா.இ.க.தரம் ஐஐ) ஆகியோரின் அன்பு மாமியும் நா.சிவநிரோஜினி (யா.ப.க) சி.மஞ்சுளானி (யா/வேம்படி மகளிர் கல்லூரி A/L 2016) ச.பிருந்தாபன், ச.கோபிகிருஷ்ணா (யா/ இந்துக் கல்லூரி) ஆகியோரின் பெரிய தாயும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் : கணவர் மகேந்திரன்
(முன்னாள் ஆசிரியை, நுணாவில் கிழக்கு அமிர்தாம்பிகை வித்தியாலயம்)

நிகழ்வுகள்
தகனம்
திகதி : (18.01.2015) ஞாயிற்றுக்கிழமை மு.ப 9.00 - மு.ப.11.00
இடம் : நுணாவில் காந்தாளம்பிட்டி இந்து மயானம்
தொடர்புகளுக்கு