மரண அறிவித்தல்

திருமதி மாணிக்கவாசகர் கனகாம்பிகை அம்மா

வட்டுக்கோட்டை அராலி வடக்கு குலனையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மாணிக்கவாசகர் கனகாம்பிகை அம்மா அவர்கள் 22-01-2013 செவ்வாய்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.

காலஞ்சென்ற சின்னையா, சிவகொழுந்து தம்பதிகளின் மகளும், காலஞ்சென்ற முருகுப்பிள்ளை சின்னத்தங்கம் தம்பதிகளின் மருமகளும்,

அன்னார், காலஞ்சென்ற மாணிக்கவாசகர் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற குலநாதன், கமலநாயகி, குலராசா, நல்லநாதன், சிவநாதன், பாலநாதன் ஆகியோரின் தாயாரும்,

காலஞ்சென்ற தங்கம்மா, காலஞ்சென்ற ஞானம்மா, காலஞ்சென்ற முத்துலிங்கம், சிவலிங்கம் ஆகியோரின் சகோதரியும்,

நிர்மலசிங்கம், சிவச்செல்வி, நிர்மலா, சிவரூபி, நிமலமலர், வனிதா தேவி ஆகியோரின் மாமியாரும்,

நிர்மலவாகினி, நிமல ரூபன், விஜேய், பிரதீப், வேந்தன், பிரியதர்சினி, வானன், பிரதாம், விவேக்கா, கெவின், கவிதா, வர்சன், வினோத், அர்சன், ரக்சனா ஆகியோரின் பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத் தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்.

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
சிவநாதன்(மகன்) — பிரான்ஸ்
தொலைபேசி : +33148665536
கைப்பேசி : +33616070798