மரண அறிவித்தல்

திருமதி மாலினி சுபாச்சந்திரன்

  -   மறைவு: 03.01.2017

 

கணயன் தோட்டம் பருத்தித்துறை புலோலி கிழக்கு, பருத்தித்துறையை பிறப்பிடமாகவும் ஜேர்மனி கேர்ணாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி மாலினி சுபாச்சந்திரன் (03.01.2017) செவ்வாய்க்கிழமை காலமானார்.

அன்னார் சுபாச்சந்திரனின் அன்பு மனைவியும் முத்துக்குமாரு – தங்கேஸ்வரி (யோகம்மா) தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான தவரத்தினம் – அன்னலக்சுமி தம்பதியரின் அன்பு மருமகளும் சஸ்மியா, சுந்தர்ராஜ், ஆகியோரின் பாசமிகு தாயாரும் சிவலிங்கம் (லண்டன்), ஜெயக்குமாரி(ஆசிரியர் கலாசாலை கோப்பாய்), சாந்தினி(K.R.S) யோகேஸ்வரி, குமுதினி (C.T.B கணக்கு பதிவாளர்), Dr. றாஜினி (ஆயுள் வேத மத்திய மருந்தகம், கிளிநொச்சி), காலஞ்சென்ற சுந்தர்ராஜ் ஆகியோரின் அன்பு சகோதரியும் புஸ்பவதி (லண்டன்), ஸ்ரீஸ்கந்தராஜா(கொனிக்கா கலர்லாப் ), காலஞ்சென்ற தயாபரன் மற்றும் தியாகராஜா, கணேஷன்.Dr.ஸ்ரீகஜன் (இலவச ஆயுள்வேத வைத்தியசாலை, உரும்பிராய்), கலாஜினி, சுபாஜினி, சுகந்தி(ஜேர்மானி), சுகந்தன் (லண்டன்), ஆகியோரின் மைத்துனியும் Dr.கோபிக்கிருஸ்ணா, துர்க்கா ஆகியோரின் பாசமிகு அத்தையும் சஞ்சிதாகிருஸ்ணாவின் சித்தியும் கபிலேஷன், பிரணவன், கபிசேகா, கொலுஷனன், ஆத்மிகா, அபிஷன் ஆர்த்தியா அவிநீசன் ஆகியோரின் பெரியம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி கிரியைகள் ஜேர்மனியில் நடைபெறும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

 

நிகழ்வுகள்
ஜேர்மனியில்
திகதி :
இடம் : ஜேர்மனி
தொடர்புகளுக்கு
ஜெயக்குமாரி
தொலைபேசி : 0213734026
கைப்பேசி : 0779581531