மரண அறிவித்தல்

திருமதி மாலினி நகுலேஸ்வரன் (முன்னாள் ஆசிரியை- கிளி/கனகபுரம் மகாவித்தியாலயம்)

யாழ். தெல்லிப்பழை கிளானை கொல்லங்கலட்டியைப் பிறப்பிடமாகவும், கோப்பாய் மத்தி கிளுவானை ஒழுங்கை  தற்போது வதிவிடமாகவும் கொண்ட மாலினி நகுலேஸ்வரன் அவர்கள் 15-06-2015 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சபாரத்தினம் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

நகுலேஸ்வரன்(முன்னாள் உதவி மாவட்ட முகாமையாளர்- சிறுவர் பாதுகாப்பு, கிளிநொச்சி, ஆறுதல் யாழ்ப்பாணம் செயற்திட்ட அபிவிருத்தி முகாமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

சதீஸ், கமலினி(லண்டன்), கௌரிசங்கர்(லண்டன்), சுபாஜினி, தர்சினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற உமாகாந் அவர்களின் அன்புச் சகோதரியும்,

சிவரூபி, கருணாகரன்(லண்டன்), அருணா(லண்டன்), குகணேஸ்வரன்(தபாலகம்- கிளிநொச்சி), சுந்தரதாசன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நதீசன், தருணீஸ், அபிசா, மகிசா, அனிஸ், அக்சனா, நிகிதா, நிகிலன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-06-2015 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11.30 மணியளவில் கோப்பாய் கைதடி வீதியிலுள்ள கந்தன்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 18-06-2015
இடம் : கோப்பாய் கைதடி வீதியிலுள்ள கந்தன்காடு இந்து மயானம்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
தொலைபேசி : 94212230455
கைப்பேசி : +94766289170