மரண அறிவித்தல்

திருமதி மேரி அன்னரெத்தினம் புவனேந்திரன்

ஒட்டகப்புலத்தை பிறப்பிடமாகவும், இளவாலையை வசிப்பிடமாகவும் கொண்ட மேரி அன்னரெத்தினம் புவனேந்திரன் அவர்கள் (22.08.2016) திங்கட்கிழமை அகாலமரணமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான திரு.திருமதி நீக்கிலாப்பிள்ளை – றோசம்மா தம்பதியரின் மூத்த புதல்வியும்,

புவனேந்திரத்தின் அன்பு மனைவியும்,

திருமதி ஜெனற் றொஷானி (ஆசிரியை யா/ புனித சாள்ஸ் மகா வித்தியாலயம்), திருமதி ஜெனற்டிலானி (பிரான்ஸ்), காலஞ்சென்ற சாள்ஸ் அமிர்தராஜ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

யூட்தயாவதி, வாசு (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நிரோஜன், ஹர்சனா, சஹானன், புகழன், அக்ஷயா (டலியா), ஆகியொரின் பாசமிகு பேர்த்தியும்,

பிலோமினா, றாஜசேகரம் ஆகியோரின் அன்பு சகோதரியுமாவார்.

அன்னாரின் பூதவுடல் நாளை (25.08.2016) வியாழக்கிழமை காலை 9மணியளவில் 270/1 அடப்பன் வீதி, யாழ்ப்பாணத்திலிருந்து இரங்கல் திருப்பலிக்காக ஒட்டகப்புலம் புனித அமல உற்சவ ஆலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் அமல உற்சவ ஆலய சேமக்கலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தகனம்
திகதி : (25 - 08 - 2016)
இடம் : அமல உற்சவ ஆலய சேமக்கலை
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
தொலைபேசி : 077 890 8180