மரண அறிவித்தல்
திருமதி யோகானந்தசிவம் செல்வநாயகம்
நவற்கிரியைப் பிறப்பிடமாகவும் வளலாய் மற்றும் ஆவரங்காலை வதிவிடமாகவும் கொண்ட திருமதி யோகானந்தசிவம் செல்வநாயகம் அவர்கள் (05/06/2018) செவ்வாய்க்கிழமை காலமானார்.
அன்னார் வினாசித்தம்பி சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும் கணபதிப்பிள்ளை சின்னமணி தம்பதிகளின் அன்பு மருமகளும் செல்வநாயகத்தின் பாசமிகு மனைவியும் சாமினாவின் பாசமிகு தாயாரும் விவேகானந்தசிவம், ஸ்ரீஆனந்தன், தர்மானந்தசிவம் மற்றும் கமலாதேவி ஆகியோரின் அன்புச்சகோதரியும் பாலசுப்பிரமணியம், ஸ்ரீஸ்கந்தராசா, அமிர்தலிங்கம், குமரகுருலிங்கம், யோகேஸ்வரி மற்றும் இராயேஸ்வரியம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியுமாவார்.
அன்னாரது இறுதிக் கிரியைகள் (06/06/2018) புதன்கழமை ஆவரங்காலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக பிற்பகல் 2 மணிக்கு ஆவரங்கால் இந்துமயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.
இத்தகவலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அயலவர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் :- கணவர் மற்றும் மகள்.
தொடர்புகளுக்கு:- 0770474141