நினைவஞ்சலி

உஷாநந்தினி கந்தசாமி

யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்டிருந்த உஷாநந்தினி கந்தசாமி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

உஷா எங்கு சென்றாய் எமைவிட்டு எங்கு சென்றாய்
உயிராய் உனை நாம் நேசித்தோம்
உயிரிலும் மேலாய் எமை நீ நேசித்தாய்
உனை பிரிந்து ஆண்டுகள்
உருண்டோடின பத்துக்கள் – ஆயினும்
உன் நினைவலைகள் எம் இரு விழிகளிலும்
ஊற்றாக ஓடும் கடலைகள்
உனை இழந்து
உயிர் துடிக்கும்
உன் உறவுகள்
உன் பிரிவால் நாளும்
உனை தேடும் நம் சொந்தங்கள்
ஊருக்கு நீ உஷாநந்தினி
உருக்கி எடுத்த எம் தங்கம் நீ
உன் ஆத்மா சாந்தியடைய
உடலோடு உயிர் உள்ளவரை
உனையே நினைத்து உயிர் வாழும் உன் தாய்
உடன் உன் சகோதரன், சகோதரிகள், அத்தான்மார், மச்சாள், பெறாமக்கள்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு