மரண அறிவித்தல்

திருமதி வியஜலட்சுமி சோமசுந்தரம்

தோற்றம்: 25.10.1929   -   மறைவு: 25.01.2017

 

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாயை பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட ஓய்வு பெற்ற ஆசிரியை திருமதி வியஜலட்சுமி சோமசுந்தரம் அவர்கள் (25.01.2017) வியாழக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற சட்டத்தரணி திரு. தர்மலிங்கம் சோமசுந்திரம் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற திருமதி. சிவகாமிப்பிள்ளை , செல்வி. கற்பகவள்ளி, திருமதி. பரமேஸ்வரி, திருமதி. செல்வபூபதி ஆகியோரின் அன்பு சகோதரியும், விஜயசுந்தரி (கனடா), ஜெயலட்சுமி (லண்டன்), குழந்தை வைத்திய நிபுணர் கலா சோமசுந்தரம் (Lady Ridgeway Hospital, borella ), திரு. மதியழகன் (USA), ஆகியோரின் அன்பு தாயாரும், திரு. குகானந்தராஜா (கனடா), திரு.ஸ்ரீநிமலன் (லண்டன்), திருமதி. நளினி (USA), ஆகியோரின் மாமியாரும், திருமதி. ஷாமினி (கனடா), திருமதி. கிருத்திகா (கனடா), பிரசன்னா (USA), தரன் (லண்டன்), தானியா, பிரியா (USA) ஆகியோரின் பாசமிகு பேர்த்தயும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக இன்று (28.01.2017) பொரளை ஜயரட்ன மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு (29.01.2017) ஞாயிற்றுக்கிழமை பகல் 12.00 மணியளவில் தகனக்கிரியைக்காக பொரளை கனத்தை இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்
குடும்பம்
24-3/1, ரத்னகார பிளேஸ்,
தெஹிவளை

நிகழ்வுகள்
பொரளை ஜயரட்ன மலர்ச்சாலையில்
திகதி : 29.01.2017
இடம் : பொரளை
தொடர்புகளுக்கு
சுகுமார்
கைப்பேசி : 0777562942