மரண அறிவித்தல்
திருமதி வேலுப்பிள்ளை கனகம்மா (மணி)

அச்சுவேலி பத்தைமேனியை பிறப்பிடமாகவும், கனடா toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை கனகம்மா அவர்கள் சனிக்கிழமை (18.04.2015) அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான இளையதம்பி பசுபதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தர் வேலுப்பிள்ளையின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான கந்தர் பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற கந்தசாமி (துரை), பரஞ்சோதி (ராசா -பத்தமேனி), ஆகியோரின் அன்புச்சகோதரியும், மற்றும் அன்னப்பிள்ளை (புத்தூர்), காலஞ்சென்றவர்களான இலட்சுமி, மாணிக்கம், பரமு, முருகேசு, இரத்தினம்மா (கிளி- கனடா), லலிதா (-பத்தமேனி), ஆகியோரின் மைத்துனியும், மற்றும் காலஞ்சென்ற லோகநாதன், கலாதேவி (canada), கமலநாதன் (Newyork),காலஞ்சென்ற சிவநாதன், கோசலாதேவி (canada), சத்தியநாதன் (canada), காலஞ்சென்ற லோகாதேவி, ஆகியோரின் பாசமிகு தாயாரும், மகாராசா (canada)வின் சிறியதாயாரும்,
காலஞ்சென்ற குகதாசன் (புட்டன்), யசோதா (Newyork), சிறீஸ்கந்தராசா (canada), ஜெகதீஸ்வரி (canada), புஷ்பலதா (லதா) (canada),ஆகியோரின் அன்பு மாமியாரும், கஜனன், கீர்த்தனன், சேவிதன், சுவர்ணன்,விபூசா,காவியா,தமிழீழா,தமிழினி,ஈழநிலா,சஞ்சனா, ஆகியோரின் பாசமிகு பேத்தியுமாவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
சத்தி (மகன்)