மரண அறிவித்தல்,
திரு அசோக்குமார் பாலசிங்கம் (குமார்)

முல்லைத்தீவு மாமுலையைப் பிறப்பிடமாகவும், கனடா மிசிசாக்காவை வதிவிடமாகவும் கொண்ட அசோக்குமார் பாலசிங்கம் அவர்கள் 01-07-2013 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கிராம சேவையாளரான சந்திரசேகரி பாலசிங்கம், இளைப்பாறிய வித்தியானந்தாக் கல்லூரி உப அதிபரான மகேஸ்வரி பாலசிங்கம் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற கந்தராஜா சந்திரா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வதனி அவர்களின் அன்புக் கணவரும்,
அபர்ணா, அதுஷ்லி, அஸ்மிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஆஷா(Luxmy Catering), அசோக்மேத்தா, அனுஷா, அஞ்சுலா, அரவிந்தபோஸ், அச்சுதமோகன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
தஷா, சிறீ, சுகு, லக்ஷி ஆகியோரின் மைத்துனரும்,
பிரபு (சுவிஸ்), சுதாஜினி(அவுஸ்திரேலியா), சுமதி, ராஜி, ஜெகா(சிறிலங்கா), ஜங்கரன் ஆகியோரின் சகலனும்,
கிர்த்தியா, அஸ்வினி, அமரேஸ், ஈஷ்வர், சீதா ஆகியோரின் பாசமிகு மாமனும்,
அன்றூ, வைஸ்ணா, அஷ்வின், அர்ச்சனா, ஹரிஷ், பிரியங்கா, சாரங்கா, மாதங்கா, அபினயா ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்