2ம் ஆண்டு நினைவஞ்சலி

திரு அரவிந்தன் சண்முகலிங்கம்

சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அரவிந்தன் சண்முகலிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

தாகம் தீரா எம்மை
தனிமையில் நீங்கள்
தவிக்க விட்டு செல்ல – நாம்
செய்த தவறு என்ன?

காதல்மிகு கணவனாய்
பாசமிகு தந்தையாய்
எம்மையெல்லாம் வாழ வைத்தீர்
பாரினில் பல காலம் வாழ்வீர் என்றிருக்க
பாதியில் பரிதவிக்க விட்டு சென்றதேனய்யா?

கார்மேகம் போல கண்கள் கண்ட
கனவுகள் கலைந்து போக
மனித மனங்கள் மரித்து போக
இறைவனும் மௌனம் காத்துக் கொள்ள
உம்மை பிரித்து இரண்டு ஆண்டுகள்
கடந்து போக
நறுமணமாய் வீசும் முன்னைய ஞாபகங்கள் மட்டும்
என்றும் போகாதய்யா

தகவல்
மனைவி(சசிகலா), பிள்ளைகள்(வசீகன், யதுர்சிகன்)

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு