மரண அறிவித்தல்
திரு. அருளானந்தம் சந்திரகுமாரன் (ஓய்வு பெற்ற தொழில்நுட்பக் கல்லூரி உதவி நூலகர், பிரபல நகைச்சுவை நடிகர்)

யாழ்ப்பாணம் அரியாலையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அருளானந்தம் சந்திரகுமாரன் 25.07.2015 சனிக்கிழமை காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான அருளானந்தம்- பாக்கியலட்சுமி தம்பதியரின் மூத்த மகனும் காலஞ்சென்ற பூபாலசிங்கம் மற்றும் கோகிலம் தம்பதியரின் பாசமிகு மூத்த மருமகனும் மாலினியின் அன்புக் கணவரும் சுசீலா(கிளி) சிறிகரன்,ஜீவாகரன், சுதர்சன் (முருகா) பிறேமா ,சர்மா ஆகியோரின் மூத்த சகோதரனும் பிருந்தா, தனுசியா ஆகியோரின் பாசமிகு தந்தையும் சுரேஸ்வரன், ஆறுமுகதாசன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் உத்தமபுத்திரன் (செட்டி), ரதி, விமலராணி, சிறிநந்தினி(சூட்டி), பகீரதன், சந்திரகலா, பவானி, நளாயினி, சுரேஸ் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஸாத்வீகா, கீா்த்தனன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று (28.07.2015) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 4 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று புதவுடல் தகனக் கிரியைக்காக அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினா், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்,
குடும்பத்தினர்.
106.4, வெற்றியார் ஒழுங்கை.
ஆனந்தன் வடலி வீதி, அரியாலை.