மரண அறிவித்தல்,
திரு ஆறுமுகம் யோசேப்பு (மணியம்)
யாழ். வயாவிளானைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி பரலோக மாதா கோவிலடியை வதிவிடமாகவும், 7 Rue Marthe, 93240 Stains, France எனும் முகவரியை தற்காலிக வதிவிடமாகக் கொண்ட ஆறுமுகம் யோசேப்பு அவர்கள் 16-04-2013 செவ்வாய்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிங்கராசா திரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராசேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
வணபிதா பிரான்சீஸ்(இலங்கை), றொபின்சன்(பிரான்ஸ்), றொய்ஸ்(பிரான்ஸ்), றொட்சன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் அப்புத்துரை, ஆறுமுகம் குருநாதி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
மலர், றூபனா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சால்ஸ் யோசப்(கிறிஸ்டி – லண்டன்) அவர்களின் அன்பு மைத்துனரும்,
றொமில்ட்டன், றோல்பன், அபிசன், அபிநயா, அக்சியன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்