மரண அறிவித்தல்

திரு இரத்தினம் சீனித்தம்பி

மட்டக்களப்பு வாழைச்சேனை புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் சீனித்தம்பி அவர்கள் 21-07-2014 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

நாகரெத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற பூமணி, மகேஸ்வரி(வாழைச்சேனை காகித ஆலை முன்னாள் தட்டெழுத்தாளர்), லோகேஸ்வரி(கல்குடா வலய உதவிக் கல்விப் பணிப்பாளர், வாழைச்சேனை பிரதேச இணக்க சபை தவிசாளர்), காளிதாசன்(காயான்கேணி சரஸ்வதி வித்தியாலய அதிபர்), யோகேஸ்வரன்(மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவர், பாராளுமன்ற உறுப்பினர்), நாகராசா(ஆசிரியர்-வாழைச்சேனை இந்துக்கல்லூரி), சந்திரவதனி(ஆசிரியை-மட்டக்களப்பு வின்சன் மகளீர் தேசிய பாடசாலை) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

அன்னாரின் திருவுடலானது வாழைச்சேனை புதுக்குடியிருப்பிலுள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 22-07-2014 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 3:00 மணியளவில் வாழைச்சேனை இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு, தகனம்
திகதி : 22-07-2014 செவ்வாய்க்கிழமை
இடம் : வாழைச்சேனை இந்து மயானம்
தொடர்புகளுக்கு
யோகேஸ்வரன்(பாராளுமன்ற உறுப்பினர்) — இலங்கை
கைப்பேசி : +94776034559