மரண அறிவித்தல்
திரு இராசரட்ணம் ஸ்ரீசந்திரா (Chartered Accountant)

கரவெட்டி துன்னாலையைப் பிறப்பிடமாகவும், Papua New Guinea ஐ வசிப்பிடமாகவும், கனடா ஸ்காபுரோவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட இராசரட்ணம் ஸ்ரீசந்திரா அவர்கள் 07-08-2013 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் இராசரட்ணம்(ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி) மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சதாசிவம், காமாட்சி(குணம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜீவமலர்(ஜீவா- கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,
பாலச்சந்திரன்(துன்னாலை), ஜெயச்சந்திரன்(துன்னாலை) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
மயூரதன்(Trinity School of Medicine), சுகன்யா(Franklin Templeton), ஜனனி(McMaster University) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவசோதிமலர்(கைதடி நுணாவில்), ஸ்ரீமலர்(கைதடி நுணாவில்) ஆகியோரின் மைத்துனரும்,
சாலினி, தாரணி, விதுஷன், தர்ஷினி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
நிலாந்தி, துசாந்தி, ஜெயந்தி, அனோஜன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
தகவல்
குடும்பத்தினர்