மரண அறிவித்தல்

திரு இராசரத்தினம் கந்தையா (முகாமையாளர் – Ceylon Merchants Ltd, Jaffna, ஓய்வூதியர் – Public Works Dept, Srilanka)

யாழ்ப்பாணம்.கன்னாதிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட இராசரத்தினம் கந்தையா அவர்கள் 14-01-2013 திங்கட்கிழமை அன்று அமரத்துவம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சண்முகம் பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பரமேஸ்வரி(பேபி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

காலஞ்சென்றவர்களான சபாரத்தினம், கண்மணி, அன்னலட்சுமி, ஜெயரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

கனகேஸ்வரி, நாகேஸ்வரி, சிவராஜா, கனகராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

லோகேஸ்வரன்(கனடா), நகுலேஸ்வரன்(நியூசிலாந்த்), விக்கினேஸ்வரன்(அவுஸ்திரேலியா), சியாமளா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

புனிதவதி, வசந்தகுமாரி, உத்தரை, சாந்திலால் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சாம்பவி, பிரணவன், நிரஞ்சன், றொஷானி, ஆதித்தன், அகிலன், சத்தியன், சாதனா ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : சனிக்கிழமை 19/01/2013, 05:00 பி.ப — 09:00 பி.ப
இடம் : Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1, Canada (905) 305-8508
கிரியை
திகதி : ஞாயிற்றுக்கிழமை 20/01/2013, 09:00 மு.ப — 11:00 மு.ப
இடம் : Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1, Canada (905) 305-8508
தகனம்
திகதி : ஞாயிற்றுக்கிழமை 20/01/2013, 11:00 மு.ப
இடம் : Elgin Mills Cemetery, 1591 Elgin Mills E, Richmond Hill, ON L4S 1M9, Canada (905) 737-1720
தொடர்புகளுக்கு
லோகேஸ்வரன்(மகன்) — கனடா
தொலைபேசி : +14162832533
சாந்திலால்(மருமகன்) — கனடா
தொலைபேசி : +14162861069
நகுலேஸ்வரன்(மகன்) — நியூஸ்லாந்து
தொலைபேசி : +6444770171
விக்கினேஸ்வரன்(மகன்) — அவுஸ்ரேலியா
தொலைபேசி : +61261660518