மரண அறிவித்தல்

திரு. இராமச்சந்திரன் (ராஜா) (விஜயா மேன்பவர் உரிமையாளர்)

தோற்றம்: 19.09.1952   -   மறைவு: 31.03.2017

ஹட்டன் குயில்வத்தையை பிறப்பிடமாகவும் கொழும்பு வத்தளை மாபாகையை வதிவிடமாகவும், கொண்டிருந்த திரு. இராமச்சந்திரன் அவர்கள் (31.03.2017) வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற திரு. திருமதி வேலுசாமிதேவரின் அன்பு மகனும் காலஞ்சென்ற பாக்கியநாதன் திருமதி.பாக்கியநாதன் அவர்களின் மருமகனும், விஜயாவின் அன்புக்கணவரும் ரம்யா, றோமேஸ், சௌமியா ஆகியோரின் அன்பு தந்தையும் சங்கர், அச்சினி, ஆகியோரின் மாமனாரும், செனாலி, வைஷாலி, விசாலிகிமாயா, ஆகியோரின் அன்பு பாட்டனாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 100/10, எட்டியாவத்தை, எல்பிட்டிவல, ராகமவிலுள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு (03.04.2017) இன்று திங்கட்கிழமை பிற்பகல் 3 மணியளவில் வெலிசர பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்
சுரேஸ் பாக்கியநாதன் (மைத்துனர்)

நிகழ்வுகள்
வெலிசர பொது மயானத்தில்
திகதி : 03.42017
இடம் :
தொடர்புகளுக்கு
சுரேஸ் பாக்கியநாதன்
கைப்பேசி : 0777689222