மரண அறிவித்தல்

திரு இராமலிங்கம் குமாரசாமி (சண்முகநாதன், ஓய்வுபெற்ற அரசாங்க உத்தியோகத்தர்)

யாழ். கோண்டாவில் மேற்கு சைவபாடசாலை ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை Fussels Lane யை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட இராமலிங்கம் சண்முகநாதன் அவர்கள் 12-07-2013 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராமலிங்கம் இராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வனும்,

காலஞ்சென்ற நாகரத்தினம், கணேசன்(மலேசியா), காலஞ்சென்ற முருகையா, நடராசா, விமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 13-07-2013 சனிக்கிழமை அன்று காலை 10:00 மணிமுதல் மாலை 06:00 மணிவரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் இறுதிக்கிரியை 14-07-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணிக்கு நடைபெற்று 04:30 மணிக்கு கல்கிசை பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:

86/1-1/2, Fussel’s Lane,
Wellawatte,
Colombo-06

தகவல்,
நடராசா(சகோதரன்), விமலாதேவி(சகோதரி), ஜீவகுமார்.

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
இலங்கை
தொலைபேசி : +94112365746
கைப்பேசி : +94777583199