மரண அறிவித்தல்,
திரு எட்வேட் இம்மனுவல் (ஓய்வு பெற்ற அஞ்சல் தினைக்கள நிர்வாக செயலாளர்(RAO))

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், கரம்பொன்னை வதிவிடமாகவும் தற்போது கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட எட்வேட் இம்மனுவல் அவர்கள் 23-02-2013 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி சந்தியாப்பிள்ளை இம்மனுவேல் தம்பதிகளின் அருமை புதல்வனும், காலஞ்சென்ற திரு. திருமதி பொன்னையாப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
வயிலற் அவர்களின் அருமைக் கணவரும்,
றெஜினோல்ட், ஹறல்ட் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அருள்விழி, நிர்மலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Rev. Sr. சிந்தியா(A.C – Asst. Provincial Apostolic Carmel. Srilanka), செல்வராணி, ரஞ்சிதா, ஜீவா ஆகியோரின் அருமைச் சகோதரனும்,
காலஞ்சென்ற அல்போன்ஸ், பத்மநாதன், ஜீவேந்திரன், பயஸ், காலஞ்சென்ற சிசிலியா, சிங்கராயர், விக்ரர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜொசி, ஜோனத்தன், டியோகன், பிரஸ்ரன், கீவன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்