கண்ணீர் அஞ்சலி

திரு ஐயம்பிள்ளை வாமதேவன்

யாழ். நல்லூர் முதலியார் வீதியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் நொசத்தல் La Chaux De Fonds ஐ வசித்து வந்தவருமாகிய ஐயம்பிள்ளை வாமதேவன் அவர்களின் கண்ணீர் அஞ்சலி.

மிகவும் அன்பான, La Chaux De Fonds தமிழ் மக்களின் நெஞ்சங்களின் நிறைந்து வாழ்ந்தவர்,

ஆருயிர் மனைவியிடம் அன்பைச் சொரிந்து வாழ்ந்தவர்,

ஆசைக்கொரு பெண்ணும், ஆஸ்திக்கு ஒரு ஆணும் என்று பெற்றெடுத்து பாசத்தை ஊட்டி வளர்த்தெடுத்தவர்,

அவர்களின் கல்வி வாழ்க்கையிலும் எப்படி அமைய வேண்டும் என்று எங்கள் அனைவருக்கும் நிலை நாட்டி காட்டியவர்,

மகனை டாக்டராகவும், மகளை ஆங்கில துறையில் பட்டதாரியாகவும் பட்டம் பெற வைத்தவர்,

பிள்ளைகளை வளர்த்தெடுப்பது எப்படி என்று எங்களுக்கு வழிகாட்டியும் நீங்களே,

எப்போதும் நீங்கள் ஓய்வாக இருந்ததை நாம் கண்டறிய மாட்டோம்,

அகவை அறுபது உருண்டோடியும் உங்களின் விரைவான செயல்களும், நடையும் உங்கள் மனதின் இளமையை எங்களுக்கு எப்பொழுதுமே உணர்த்தி வந்தது,

எனது பொறுப்பு இனி முடிந்தது இவ்வுலகில் என்று விரைவாக சென்று விட்டீர்களோ இறைவன் திருவடிக்கு.!

இவரை இழந்து துன்பத்திலும் வேதனையிலும் கண்ணீர் வடிக்கும் குடும்பத்தவர் அனைவருக்கும் எங்கள் கண்ணீர் அஞ்சலியையும், ஆழ்ந்த துயரத்தையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.

தகவல்
La Chaux De Fonds வாழ் நண்பர்கள்

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
ரவீந்திரநாதன் சிவசம்பு — சுவிட்சர்லாந்து
தொலைபேசி : +41329260324