மரண அறிவித்தல்

திரு கணபதிப்பிள்ளை அருணகிரிநாதன்

முல்லை. முள்ளியவளை 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை அருணகிரிநாதன் அவர்கள் 09-12-2014 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்,

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கண்மணி அவர்களின் அன்புக் கணவரும்,

கலாநாதன், சுகுணாவதி, சகுந்தலா, சுலோஜனா, குபேரினி, ரூபநாதன், சாலினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கனகசபை, சண்முகநாதன், அமிர்தலிங்கம், புவனேஸ்வரி, ராஜேஸ்வரி, செல்வநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
ரூபன் (மகன்)

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
ரூபன் — பிரித்தானியா
கைப்பேசி : +447412658960
சகுந்தலா — இலங்கை
கைப்பேசி : +94773815573
சுகுணா — இலங்கை
கைப்பேசி : +4915211307365