மரண அறிவித்தல்

திரு கணபதிப்பிள்ளை ஏகாம்பரம்

தோற்றம்: 01 AUG 1939   -   மறைவு: 04 MAY 2020
திரு கணபதிப்பிள்ளை ஏகாம்பரம்
முன்னாள் சமாதான நீதவானும், தமிழ் அரசு கட்சி ஆரம்பகால உறுப்பினர், முன்னாள் தமிழர் விடுதலைக் கூட்டணி- கிளிநொச்சி மாவட்ட செயலாளர்

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம், வவுனியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை ஏகாம்பரம் அவர்கள் 04-05-2020 திங்கட்கிழமை அன்று கிளிநொச்சியில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை பாக்கியலட்சுமி தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும்,

காலஞ்சென்ற அருளம்பலம்(முன்னாள் விவாக பிறப்பு இறப்பு பதிவாளர்- கிளிநொச்சி), திலகவதி(வட்டக்கட்சி), புவனேஸ்வரி(லண்டன்), ஞானாம்பாள்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான பாக்கியலட்சுமி, இராசரட்ணம், கணேசு, மனோகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இராசரட்ணம் உதயகுமார்(விவாக பிறப்பு இறப்பு பதிவாளர்- கிளிநொச்சி), கணேசு ஜெனார்த்தனன்(கமநலசேவை திணைக்களம் உத்தியோகத்தர்- கிளிநொச்சி), இராசரட்ணம் இளங்குமாரன்(வட்டக்கட்சி), ஜெயவேந்தி சிவகுமார்(லண்டன்), இராசரட்ணம் மங்களகுமாரன்(லண்டன்), நிர்மலராஜ் இளவேந்தி(அதிபர், கிளி/சிவநகர் அ.த.க.பாடசாலை), மனோகரன் பிருந்தினி(பொது வைத்திய நிபுணர்- லண்டன்), மனோகரன் அமுதகிரணன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சங்கீதா, ஷஞ்சிதன், ஜிந்தீபன், கீர்த்தி, பகிர்த்தன், ஹரிஸ்மேனன், சுருதி, மிர்ணளனி, யானகன், பருதி, கவின், மகிசன், கருணி, புகழ்ளினி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-05-2020 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் உருத்திரபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனக் கிரியைக்காக எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
 இல 6. டி10, உருத்திரபுரம், கிளிநொச்சி.
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
ஜெயவேந்தி சிவகுமார்
கைப்பேசி : +447588075989
இராசரட்ணம் உதயகுமார்
கைப்பேசி : +94776181756
கணேசு ஜெனார்த்தனன்.
கைப்பேசி : +94778624650
நிர்மலராஜ் இளவேந்தி
கைப்பேசி : +94774529019
மனோகரன் பிருந்தினி
கைப்பேசி : +447383084721
இராசரட்ணம் இளங்குமாரன்
கைப்பேசி : +94765343476
இராசரட்ணம் மங்களகுமாரன்
கைப்பேசி : +447482185309
மனோகரன் அமுதகிரணன்
கைப்பேசி : +447446867787