மரண அறிவித்தல்
திரு கதிரவேலு தவராசா

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு சுதந்திரபுரம், கிளிநொச்சி முரசுமோட்டை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கதிரவேலு தவராசா அவர்கள் 24-03-2020 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு(இலங்கை பொலிஸ்), கண்மணி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற நாகநாதி, மாணிக்கம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும், விமலராணி அவர்களின் ஆருயிர்க் கணவரும், கிரூஜனன் அவர்களின் ஆருயிர்த் தந்தையும், இந்திரா, பூபதிராசா, காலஞ்சென்றவர்களான சந்திரா, சித்திரா மற்றும் இராணி, வனிதா, பாமா , காலஞ்சென்ற திருக்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும், மேனகா அவர்களின் பாசமிகு மாமனாரும், பசுபதி, காசுபதி ஆகியோரின் பாசமிகு மருமகனும், கந்தையா(ஜே.பி பாண்டியன்குளம்), இரதிதேவி, கணபதிப்பிள்ளை, காலஞ்சென்ற வெங்கடாசலம், குமாரசாமி, சிறிதரன், வேலாயுதபிள்ளை, மனோகரரஞ்சிதம் , பாலச்சந்திரன், பத்மாவதி, தனலட்சுமி, மற்றும் காலஞ்சென்றவர்களான தர்மராசா, தனபாலசிங்கம் ஆகியோரின் மைத்துனரும், பாஸ்கரன், காலஞ்சென்ற ஜீவா, லதா, சிவா, வாணி, சுதா, பாபு, நேசன், விஜி, வதனி, கவிதா, சுரேஸ், நித்தியா, ரமேஸ், நந்தினி, அனுஷா, சோபி, சோபா, யசோ, கயன், தீபா, காலஞ்சென்ற கேசவன், தீபன், சுயன், அனோச் ஆகியோரின் அருமை மாமாவும், ஜெகன், காலஞ்சென்ற கஸ்தூரி, பிரியா, காலஞ்சென்ற சுதன் ஆகியோரின் அருமைச் சித்தப்பாவும், பவிஷா அவர்களின் ஆசைப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-03-2020 வியாழக்கிழமை அன்று அவரது முரசுமோட்டை இல்லத்தில் மு.ப 09:00 மணிமுதல் மு.ப 11:00 மணிவரை நடைபெற்று பின்னர் சுதந்திரபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.