மரண அறிவித்தல்

திரு.கந்தையா கதிர்காமலிங்கம் (Colombo High Court Grapher)

தோற்றம்: 19.09.2017   -   மறைவு: 04.07.2017

நயினாதீவு 1 ஆம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா கதிர்காமலிங்கம் அவர்கள் (04.07.2017) அன்று செவ்வாய்க்கிழமை நயினை ஸ்ரீ நாகபூசணி அம்பிகை அரண் சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற கந்தையா – சௌந்தரம் தம்பதிகளின் கனிஷ்ட புதல்வனும் மதுரைலிங்கம் – விஜயகுலராணி தம்பதிகளின் அன்பு மருமகனும் மாலினி (ஓய்வு பெற்ற ஆசிரியை – கொ/விவேகானந்தா கல்லூரி) அவர்களின் ஆருயிர்க் கணவரும் கிஷோ ராகுலின் பாசமிகு தந்தையும் அன்னசோதி, செல்வராணி, செல்வராசா, செல்வமலர், காலஞ்சென்ற சிவமணி, உலகநாயகி, புண்ணியலிங்கம், நவரெட்ணராசா ஆகியோரின் அன்பு சகோதரனும், சோமசுந்தரம், காலஞ்சென்ற சந்திரகேசரம், லங்காதேவி, மகேந்திரராசா, செல்வரட்ணம், குணேந்திரா, யோகேஸ்வரி, மைதிலி, மஞ்சுகா, மதிவதனா, கேதீஸ்வரன், சத்யபாலன், சிவசண்முகராசா, பத்மாவதி, விஜி ஆகியோரின் அன்பு மைத்துனரும், சங்கரன், அம்பிகை பாகன், ரோஹான் ஆகியோரின் பாசமிகு சகலனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 07.07.2017 இன்றும் (வெள்ளிக்கிழமை) 08.07.2017 நாளையும் (சனிக்கிழமை) பொரளை ஜெயரத்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 09.07.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 2.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் கனத்தை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலில் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : 07.07.2017, 08.07.2017
இடம் : பொரளை ஜெயரத்ன மலர்ச்சாலையில்
தகனம்
திகதி : 09.07.2017
இடம் : கனத்தை இந்து மயானத்தில்
தொடர்புகளுக்கு
கிஷோ ராகுல்
தொலைபேசி : 0112527676
கைப்பேசி : 0768041607