மரண அறிவித்தல்

திரு கந்தையா பரமலிங்கம்

மரண அறிவித்தல்

திரு கந்தையா பரமலிங்கம்

மலர்வு 11.05.1935   உதிர்வு 20.05.2015

மீசாலை மாவடிப்பிள்ளையார் கோவிலடியை பிறப்பிடமாகவும் கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு கந்தையா பரமலிங்கம் அவர்கள் 20.05.2015 அன்று கொழும்பில் காலமானார்.

இவர் காலஞ்சென்ற கந்தையா சிவகாமியின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற வைரமுத்து இலட்சுமிப்பிள்ளையின் மருமகனும், பார்வதிப்பிள்ளையின் அன்புக்கணவரும், சசிகலா தேவி (பிரான்ஸ்), மோகனதாஸ் (பிரான்ஸ்), சுமதி (கொழும்பு) ஆகியோரின் அன்புத் தந்தையாரும் கனேசபிள்ளை (பிரான்ஸ்), மேனகா (பிரான்ஸ்), யசோதரன் (சிவகுரு ஹாட் வெயர்ஸ் கிளிநொச்சி) ஆகியோரின் அன்பு மாமனாரும் சுஜீகரன், கிருபாகரன், வசீகரன், மத்தியூ, ஷ்ரீபன், வினோஜா, தரணீஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் காலஞ்சென்ற தெய்வானை, இராமலிங்கம், சுப்பிரமணியம் காலஞ்சென்றவர்களான இரத்தினம், மகேஷ்வரி, காசிப்பிள்ளை ஆகியோரின் சகோதரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 21.05.2015 இன்று பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 22.05.2015 நாளை வெள்ளிக்கிழமை மாலை 2.00 மணியளவில் தகனக்கிரியைக்காக கனத்தை இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இத்தகவலை உற்றார் உறவினர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றனர்.

தகவல்-குடும்பத்தினர்

கோல்ட்டன் ரவர்

41C 2/1,மகாவித்தியாலய மாவத்தை, கொழும்பு-13.

0112337619 0777722305

 

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : 21.05.2015
இடம் : பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலை
தகனம்
திகதி : 22.05.2015 மாலை 2.00
இடம் : கனத்தை இந்து மயானம்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
தொலைபேசி : 0112337619
கைப்பேசி : 0777722305