மரண அறிவித்தல்
திரு குமாரசாமி அருளானந்தம் (BCom (Hons), AIB (SL) ஓய்வு பெற்ற இலங்கைவங்கி முகாமையாளர்)

மட்டக்களப்பு பெரியகல்லாற்றைப் பிறப்பிடமாகவும், மட்டுநகரை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி அருளானந்தம் அவர்கள் 26.05.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை ராசலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
திருச்செல்வி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரஷாத்(கனடா), நீரஜா, நியோஜிதா, துஷானியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஆனந்தவடிவேல், தவானந்தம், ஜீவானந்தம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மயூரா(கனடா), ரொமேஷ்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
வினோத்(சுவிட்சர்லாந்து), டேனுஷாத் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
பகீரதன்(கனடா), கலைச்செல்வி, சுபச்செல்வி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ரமியா(சுவிட்சர்லாந்து), சுவரிக்கா வர்ஷாணி(கனடா), எபிக்கா மிதுஷாணி(கனடா) ஆகியோரின் அன்புமிகு மாமாவும்,
காலஞ்சென்ற பொன்னம்மா, ஞானம்மா, பிள்ளையம்மா ஆகியோரின் அன்புப் பெறாமகனும் ஆவார்.
அன்னாரின் இறுதிச்சடங்குகள் எதிர்வரும் 30.05.2013 வியாழக்கிழமை அன்று பெரியகல்லாறு இந்து மயானத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
வினோத் தவானந்தம்(சுவிட்சர்லாந்து)