மரண அறிவித்தல்
திரு குலசிங்கம் சுரேஸ்குமார்

மன்னார் உப்புக்குளத்தினைப் பிறப்பிடமாகவும், பெற்றாவை வசிப்பிடமாகவும் கொண்ட குலசிங்கம் சுரேஸ்குமார் (உரிமையாளர் – எல்.என்.எஸ் வாடகைப்பொருள் விற்பனை நிலையம், எல்,என்.எஸ் கட்டிடத்தொகுதி பள்ளிமுனை வீதி, உப்புக்குளம், மன்னார்) அவர்கள் 20-10-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று சவுதி அரேபியாவில் அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், குலசிங்கம்(உரிமையாளர்-ரதுஷன் கெஸ்ட் இன், புதிய மூர்வீதி, மன்னார்), ஈஸ்வரி(தேவி-முன்னாள் கிளை முகாமையாளர் மன்/ப.நோ.கூ.சங்கம்) தம்பதிகளின் அன்பு மகனும்,
லுக்ஷிகா(பிரான்ஸ்), நிஷாந்தினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெகநாதன்-பத்மலோஜினி(பிரான்ஸ்), தெய்வேந்திரன்-புஷ்பராணி(பிரான்ஸ்), நவராசா-பானுமதி(இலங்கை) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
சிவானந்தமூர்த்தி வசந்தா(பிரான்ஸ்), காலஞ்சென்ற தியாகராஜா முத்துப்பிள்ளை, ராஜன்(பொது முகாமையாளர் மன்/ப.நோ.கூ.சங்கம்) ஆகியோரின் அன்பு மருமகனும்,
ராஜ்குமார்(பிரான்ஸ்), திருச்செல்வன்(பிரான்ஸ்), ஜெயா(பிரான்ஸ்), யுவனா(பிரான்ஸ்), மெரியம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரதுஷன்(பிரான்ஸ்), ரிஷிகேஷ்(சுரேஸ்-பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சதீஸ்(பிரான்ஸ்), பிறேம்(பிரான்ஸ்), கண்ணா(பிரான்ஸ்), மயூரன்(பிரான்ஸ்), குமரன்(பிரான்ஸ்), செந்தூரன்(பிரான்ஸ்), எல்சா(பிரான்ஸ்), காலஞ்சென்ற சூரியபிரகாஷ், பிரதீப்(மலேசியா), கஸ்தூரி(யூனியன் அசுரன்ஸ்), திவ்யா(சித்தி விநாயகர் இந்து கல்லூரி), பிரியதர்சினி(தென்கிழக்கு பல்கலைக்கழகம்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 22-12-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் மன்னார் பொது சேமக்காலை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்