மரண அறிவித்தல்
திரு சந்திரமூர்த்தி செல்வக்குமார்

யாழ். பருத்தித்துறை கந்தவுடையார் ஒழுங்கைப் பிறப்பிடமாகவும், கம்போடியாவை வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரமூர்த்தி செல்வக்குமார் அவர்கள் 06-04-2020 திங்கட்கிழமை அன்று பருத்தித்துறையில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்தம்பி சந்திரமூர்த்தி, சீதாலக்ஷ்மி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசையா அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராஜகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,
அபராஜிதன்(கம்போடியா), பிருதிவிராஜன், கோட்டீஸ்வரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மாலதி(ஜேர்மனி), சுகந்தி(ஜேர்மனி), காலஞ்சென்ற ஆதித்தகுமார், திருமகன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தமிழரசி அவர்களின் அன்பு மாமனாரும்,
கனகசபை சிவஞானசுந்தரம் அவர்களின் அன்பு மைத்துனரும்,
ரவிவர்மா, காலஞ்சென்ற ரகுவர்மன், திவ்யா(ஜேர்மனி), மிதிலா(ஜேர்மனி), அபிராமி(ஜேர்மனி), சண்முகேஸ்(பிரான்ஸ்), ஜங்வன்(பிரான்ஸ்), வைஷாலி(பிரான்ஸ்), தர்மிகா, சாயினி ஆகியோரின் அன்பு மாமாவும்,
சுகந்தன்(அவுஸ்திரேலியா), ஜெயந்தன்(கனடா), பிருந்தன்(கனடா), காயத்திரி(கனடா) ஆகியோரின் அன்பு பெறாமகனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 07-04-2020 செவ்வாய்க்கிழமை அன்று பருத்திதுறையில் தகனம் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.