மரண அறிவித்தல்
திரு சரவணமுத்து குமாரவேலு (எழுதுமட்டுவாழ் கணேசவித்தியாலய ஓய்வுபெற்ற முன்னாள் அதிபர்)

சாவகச்சேரி வடக்கு மடத்தடியைப் பிறப்பிடமாகவும், எழுதுமட்டுவாள் வடக்கை வதிவிடமாகவும் கொண்ட சரவணமுத்து குமாரவேலு அவர்கள் 10-05-2013 வெள்ளிக்கிழமை அன்று கனடா ஸ்காபுரோவில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சரவணமுத்து, அன்னைப்பிள்ளை தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரனும், காலஞ்சென்ற இராமலிங்கம் பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற குகநேசன்(ஸ்காபுரோ கனடா), கணேசன்(மெல்போர்ன் அவுஸ்திரேலியா), சிவநேசன்(ஸ்காபுரோ கனடா), பவானி(ஸ்காபுரோ கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற முத்தையா, காலஞ்சென்ற சிவகுரு, காலஞ்சென்ற கனகலிங்கம், மற்றும் இரத்தினம்மா, ஞானாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
முருகதாசன், துஷ்யந்தி, ஜெயந்தி, வல்லபை, கஜேந்திரா, சரத்சந்திரா, உத்தரை ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
ஜெகதீசன், ஜெயபாலன், ஜெயக்குமார், ஜெயபரன், றோகினி, சித்திரா ஆகியோரின் அன்பு மாமாவும்,
ரஞ்சிதமலர், கமலினி, நளாயினி, பரிமளகாந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நடராஜலிங்கம், ராஜேஸ்வரி, விக்னேஸ்வரி, நேசமலர், பத்மநாதன், கையிலைநாதன், பத்மாவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தானியா, அஞ்சனா, சேயோன், சேரன், செண்பகா, விசாகா, விசாலி ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,
சேந்தன், கேதகி ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.